, ,

SN86 Anbu Rajavum Katru Kudhiraiyum (அன்பு ராஜாவும் காற்றுக் குதிரையும்!)

230.00

 

அயன், கோ, அனேகன், ஆரம்பம், கவண், மாற்றான், வேலைக்காரன், தனிஒருவன், 180 ஆகிய படங்களின் மூலம் திரைக்கதையில் தனி முத்திரை பதித்த சுபா எழுதிய சூப்பர் டூப்பர் த்ரில்லர் நாவல்கள். ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

SUBA Novel 86:AnbuRajavum KatruKudhiraiyum

Please do check out other novels by the author in this link SUBA Novels.

Kindly share your rating and review us on Google by clicking this link Rate us. This will help us to reach more people.

Testimonial from reader:

ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர் செய்த அதே விஷயம்தான் இங்கே அன்புராஜா செய்வதும். பலம் வாய்ந்த மந்திரசக்தி பொருந்திய எதிரியை, நல்ல சக்திகளுடைய துணையுடன் பலத்தைப் பெற்று எதிர்த்து அழிப்பது. இந்தச் செயல் கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், ஒரு சிறுவனின் வரம்புக்குள்ளிருந்து கொண்டு எப்படியெல்லாம் அன்பு ராஜா சாதிக்கிறான் என்பது சொல்லப்பட்டிருக்கும் விதம் மிக விறுவிறுப்பானதாக அமைந்திருக்கிறது. போராட்டங்களும், சாகசங்களும் கூடவே திகிலும் ஒருங்கிணைந்து இந்த மாயாஜாலக் கதையை ஒவ்வொரு பக்கத்தையும் ஆர்வத்துடனேயே புரட்ட வைக்கின்றன. வெறும் வாய் வார்த்தைக்காகச் சொல்வதில்லை உண்மையிலேயே….’ஒரே மூச்சில் படிக்க வைக்கிற கதை’. அதைப் படித்து முடித்ததும் நீங்களே உணர்வீர்கள்.

‘தமிழில் ஒரு ஹாரி பாட்டர்’ என்று சொல்வதற்கு மற்றொரு வலுவான காரணமும் உண்டு. ஹாரிபாட்டர் கதை உலகமெங்கும் புகழ் பெற்றதற்குக் காரணம் அது சிறுவர்களுக்கான கதையாக மட்டுமல்லாது பெரியவர்களும் படித்து ரசிக்கக் கூடிய வகையில் பல திருப்பங்களைக் கொண்டிருந்த விறுவிறுப்பான கதைத் தொடர் என்பதே. நம் அன்புராஜாவின் கதையும் அந்தத் தனிச்சிறப்பை விடாமல் தக்க வைத்திருக்கிறது என்பதால்தான் அந்த அடைமொழி. இங்கே நான் சொன்னவைகளைப் படித்து முடிக்கையில் நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்பதுதான் நிஜமான நிஜம்.

SUBA Novel 86:AnbuRajavum KatruKudhiraiyum