, ,

Sundarakandam (சுந்தரகாண்டம்)

110.00

சுபிட்சம் நல்கும் சுந்தரகாண்டம் (பாராயண முறைகளுடன்)
சர்வத்தையும் சுபிட்சமாக்கும் சுந்தரகாண்டம்! பாராயண முறைகளுடன், எளிய நடையில், இனிய நூல் தங்கள் கரங்களில்! அளவில்லா சுபிட்சம் தங்கள் இல்லங்களில்!! சொல்லாவொண்ணா ஆனந்தம் தங்கள் வாழ்வில்!!!

Sundarakandam highlights Hanuman’s adventures and devotion in the Ramayana. Reading this chapter brings prosperity, health, and inner peace. It’s a powerful tool for overcoming life’s troubles and achieving success. Share this treasure with loved ones and enrich their lives. Watch our video on Sundarakandam and explore more Vaishnava books published by us.

 

சுந்தரகாண்டம் நூலின் சிறப்பு என்ன?

பிறவிப்பெருங்கடலில் சிக்கி அல்லல் படும் சீதா என்னும் ஜீவாத்மாவை, ஸ்ரீராமன் என்னும் பரமாத்மாவோடு சேர்ப்பிக்க, அனுமன் என்னும் குரு ஒருவரால் மட்டுமே இயலும் என்பதை எளிமையாக கதை போல் விளக்கும் அற்புத நூலே சுந்தரகாண்டம்!

 

ஏன் படிக்கவேண்டும்?

சுந்தரகாண்டத்தை பக்தியுடன் பாராயணம் செய்தால் அது வாழ்க்கையில் பல நன்மைகளை நிச்சயம் அருளும்! ஜாதி, மத, இன பேதமின்றி, இதை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து பலனடைந்தவர்கள் பலர்.

 

ஒவ்வொரு ஸர்க்கத்துக்கு ஒரு நற்பலன்!


சுந்தரகாண்டத்தின் குறிப்பிட்ட ஸர்க்கங்களை 48 நாட்களுக்கு பாராயணம் செய்தால் நாம் கொஞ்சமும் எதிர்பாராத நற்பலன்கள் எல்லாம் நமக்கு அருளப்படும்!

 

பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளின் பிடியிலிருந்து மீள


அனுமன் இலங்கையை அடைந்து, லங்கா தேவதையை வென்றதை விவரிக்கும் ஸர்க்கம் 3 48 நாட்கள் தினமும் பாராயணம் செய்தால்  ஆஞ்சநேயன் அருளால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளின் பிடிகளில் இருந்து மீளலாம்.

 

ஏழ்மை விலக


அனுமன் சீதா பிராட்டியின் தரிசனம் பெற்ற ஸர்க்கம் 15 48நாட்களுக்கு, தினமும் பாராயணம் செய்தால் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

 

பிரிந்து போனவர்கள் சேர மற்றும் உறவுகள் மேம்பட


சுந்தர காண்டம் 33, 34, 35 ஸர்க்கங்களை 48 நாட்களுக்கு, தினமும் காலையில், பாராயணம் செய்யவேண்டும்.

 

அபாயங்களிலிருந்து தப்பிக்க


ஸ்ரீராமபிரானது கணையாழியை, அனுமன் சீதைக்கு அளிக்கும் 36 ஆம் ஸர்க்கத்தை, தினமும் காலையில் 48 நாட்களுக்குப் பாராயணம் செய்யவேண்டும்.

 

விரும்பிய செயல்கள் யாவும் நன்றாக நடைபெற


அனுமன் அசோகவனத்தை அழித்த நிகழ்ச்சியைச் சொல்லும் ஸர்க்கம் 41 தினமும் காலையில் 48 நாட்களுக்குப் பாராயணம் செய்யவேண்டும்.

 

எப்படிப் பாராயணம் செய்யவேண்டும்?


ஸ்ரீராமரின் படத்தை வைத்து, புஷ்பம் சார்த்தி, பழம், பால் நிவேதனம் செய்து, தினம் ஒரு அத்தியாயம் முழுமையாகப் படிக்க வேண்டும். பாராயணம் முடிந்த பின்,தீபாராதனை செய்து, ஸ்ரீராமன் படத்தை மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

 

எதிரிகளை வெற்றி கொள்ள..


பலவான்களான கிங்கரர்களை அழிக்கும் அனுமானுடைய வீரத்தைப் பறைசாற்றும் ஸர்க்கம் 42 காலை வேளையில், ஸ்ரீராமரின் படத்துக்கு முன்னால் சர்க்கரை சேர்த்த பசும்பாலை நைவேத்யமாகப் படைத்து, 48 நாட்களுக்குப் பாராயணம்செய்யவேண்டும்.

 

கெட்ட கனவுகளால் துன்பப்படாமல் இருக்க


திரிஜடை கண்ட ஆச்சர்யமான கனவை விவரிக்கும்  ஸர்க்கம் 27 தினமும் காலை, ஸ்ரீராமபிரானின் படத்தை வைத்து, புஷ்பம் சார்த்தி, தீபம் ஏற்றி, வாழைப்பழம் மற்றும் கொஞ்சம் சர்க்கரையை நிவேதனமாக வைத்து 3 நாட்களுக்குப் படிக்கவேண்டும்.

 

சமஸ்க்ருத ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதுதானே முறை?


சமஸ்கிருத ஸ்லோகங்களில் சொல்லப்பட்ட சுந்தரகாண்டத்தின் தமிழ் உரையைப் படித்தாலே இவ்வளவு நற்பலன்களும் நமக்குக் கிடைக்குமா? இறை அருளுக்கு பக்தியும், நம்பிக்கையுமே துணை புரியுமே தவிர மொழி அன்று. இறைவன் மொழி கடந்தவன். தமிழ்ப் பாசுரம் கொண்டும் அவன் அருளை யாசிக்கலாம்சஹஸ்ரநாமம் உச்சரித்தும் அவன் அருளைப் பெறலாம்.

 

வேண்டுகோள்


பாராயணம் செய்யுங்கள். பலனடைவீர்கள். இந்த மகத்தான நூலின் மூலம் நீங்கள் அடைந்த பேற்றினை நண்பர்களிடமும், உறவினர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களை மேலும், மேலும் வளத்துடன் வாழ வழி வகுக்கும்!

 

பரிசளிக்க உகந்த நூல்


எந்த நாளிலும் எந்த விழாவிலும் எவருக்கும் பரிசளிக்க உகந்த நூல்.

You may also like…