மகம் நட்சத்திரகாரர்கள் ஃபீனிக்ஸ் பறவை போன்றவர்கள்!!!
மக நட்சத்திரக்காரர்களே, நீங்கள் வல்லவர்கள். பொதுவாக எதற்கும் கலங்காத மனமும், எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்டிருப்பீர்கள். உங்களுடைய சொந்த சாமர்த்தியத்தால், விதி மற்றும் கர்மவினைகள் அல்லது நண்பர்களின் நம்பிகைத் துரோகங்கள் காரணமாக ஏதாவது இழிநிலையை எய்த வேண்டியிருக்கும். ஆனால்… கவலைப்படாதீர்கள். அதிலிருந்து நீங்கள் ஜாம், ஜாம் என்று மீண்டு வருவீர்கள். இந்தக் கதையை படித்தால் அது உஙளுக்கே புரிந்துவிடும்.
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் இருந்த வறண்ட கிணற்றில் விழுந்து தொலைத்தது. விழுந்த பின்புதான் கழுதைக்கு அதிலிருந்து வெளியேற வழியே இல்லை என்பது தெரிய வந்தது.
அழும் குழந்தைதான் பால் குடிக்கும் என்னும் உலக வழக்கத்துக்கு ஏற்ப உள்ளே விழுந்த அந்தக் கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றுவது என்று விவசாயி விடிய விடிய யோசித்தான். அவனுக்கு ஒரு யோசனையும் புலப்படவில்லை.
அந்தப் பரிதாபமான ஜீவனைக் காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்தக் கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தது. அந்தக் கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிரவும் அந்தக் கழுதையோ உழைத்து, உழைத்துத் தேய்ந்து போன ஜீவன் என்பதால் அதைக் காப்பாற்றுவது வீண் வேலை என்று முடிவு செய்த விவசாயி, கழுதையுடன் அப்படியே அந்தக் கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க, அனைவரும் திரண்டனர். அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியால் வெட்டி, அள்ளி, கூடையில் நிரப்பிக் கொண்டு வந்து அந்தக் கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.
கழுதை நடப்பதை உணர்ந்தது. தனக்கு உயிரோடு சமாதி கட்டுகிறார்கள் என்பதை அது புரிந்து கொண்டது. மரண பயம் அதைத் தாக்கியது. பயத்தில் அது மேலும் சத்தமாகவும், பரிதாபமாகவும் அலறியது.
ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. மக்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி, அள்ளிக் கொட்ட, கொஞ்ச நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு மணி நேரம் மண்ணை அள்ளிக் கொட்டியவுடன் விவசாயி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணைக் கொட்டிய போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணைக் கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணைப் போடப் போட கழுதை தனது முயற்சியைக் கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
மக நட்சத்திரக்காரர்களும் இப்படித்தான். வாழ்க்கை சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் இப்படித்தான் உங்களைப் படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் அவர்கள் மீது கொட்டி சமாதி கட்டப் பார்க்கும்.
ஆனால் நீங்கள் இது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், உங்களுடைய தன்னம்பிக்கை, சொந்த முயற்சி, சாமர்த்தியம் ஆகியவற்றை உபயோகித்து மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்து விடுவீர்கள்.
மேலும் உங்கள் நட்சத்திரத்தைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படிக்கவும்.
ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யாவின் புதிய புத்தகம் – உங்கள் வாழ்க்கைக்கு ஒளி தரும் வழிகாட்டி!
புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:
- ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியே பலன்கள்!
- நட்சத்திரத்தின் தனித்தன்மையை விளக்கும்
- பரிகாரக் கோவில்கள்,
- நவரத்தினக் கல்,
- கல்வி,
- தொழில்,
- குழந்தைப்பேறு,
- யந்திர வழிபாட்டு முறை,
- மலர் & அதன் மருத்துவ பலன்கள்,
- நிறம்,
- நட்சத்திர விலங்கு,
- நட்சத்திரப் பறவை போன்ற அத்தியாவசிய விளக்கங்கள்.
இத்துடன், முத்தான மூன்று தனி இணைப்புகள்!
- நட்சத்திர யந்திரத்தின் வண்ணப்படம்
- 27 நட்சத்திர தினங்களுக்கான தினப்பலன்கள்
- நட்சத்திர தெய்வத்தின் வண்ணப்படம்