,

நீலா பாட்டியின் குறிப்புகள் (Neela Paatiyin Kurippugal)

170.00

Neela Paatiyin Kurippugal:

நூல் ஆசிரியர் P. நீலா அவர்களுக்கு 94 வயது. தான் சிறு வயதில் இருந்து சேகரித்து வைத்திருந்த டிப்ஸ்களில் இருந்து, இந்த காலத்திற்கும் பொருந்தக் கூடிய குறிப்புகளை தேர்ந்தெடுத்து அழகு, ஆன்மீகம், உடல் நலம், சமையல், சலவை, சுற்றுலா, தையல், தோட்டம், பெண்கள் ஆரோக்கியம், பொது ஆரோக்கியம், முதியோர் நலம், மூலிகை வைத்தியம் மற்றும் பொதுவானவை என்று வகைப்படுத்தி நூலாக்கம் செய்திருக்கிறார்.

அனைத்தும் சுவையான, அனைவராலும் எளிதில் பின்பற்றக்கூடிய குறிப்புகள். அது மட்டுமல்ல, அனைத்து குறிப்புகளும் தகுந்த படங்களுடன் இடம் பெற்றிருப்பது  நூலுக்கு மேலும் சுவையூட்டுவதாய் அமைந்துள்ளது. இது அனைவரும் விரும்பி படித்து பயன்பெறும் நூலாய் இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை.

Neela Paatiyin Kurippgal: Author P. Neela is 94 years old. From the tips she has collected since childhood, she has selected tips that are relevant to this era and categorized them into beauty, spirituality, health, cooking, laundry, tourism, sewing, gardening, women’s health, general health, herbal remedies, etc.

All are easy-to-follow tips for everyone. Not only that, all the references are accompanied by appropriate pictures which add flavor to the text. We have no doubt that this will be a book that everyone will enjoy reading and benefiting from.

Please click this link to rate and review us on Google. Share insights about the book Neela Paatiyin Kurippugal with friends and relatives you think might be interested. If you enjoy cookery books, be sure to explore this link for Cookery.

 

Neela Paatiyin Kurippugal:

  • சமையல் குறிப்புகள், சமையலறைக் குறிப்புகள், கைவைத்தியக் குறிப்புகள்,  உடல் நலக் குறிப்புகள், உள நலக் குறிப்புகள், சலவைக் குறிப்புகள்.. இன்னும்..
  • அழகு, ஆன்மிகம், தையல், தோட்டம், சுற்றுலா, தலைமுடி இதர, இதர என வளமான வாழ்க்கைக்கான அத்தனை குறிப்புகளும் இந்நூலில் கல்வெட்டுச் சாசனங்களாய்க் காத்திருக்கின்றன.
  • மாதவிடாய்த் தொல்லைகள் தொலையவும், கர்ப்பம் காக்கவும், பிரசவம் சிறக்கவும், தாய்ப்பால் சுரக்கவும், உறக்கம் உன்னதமாகவும் ஏற்றமான குறிப்புகளும் இதில் இணைந்துள்ளன.

 

திருமதி நீலா பஞ்சாபகேசன்: 

பிறந்தது குடந்தையில், (15. 09. 1929) பள்ளிக்கல்வி பயின்றவர். ஹிந்தியும் கற்றுத் தேர்ந்தவர். தையல் கலை வல்லுநர், கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர். ஜோதிடம், வீட்டு மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை மருந்துகள் என்று பல பகுதிகளில் ஆர்வம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்களில் சொல்லப்பட்ட பயன்படு விஷயங்களை ஒரு கடலளவு தொகுத்து வைத்திருப்பதில் ஒரு பகுதிதான் இந்த ‘நீலா பாட்டியின் குறிப்புகள்’. சென்னையில் மகன், மருமகள், மகள், மருமகன், பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த வருடம், அவருடைய கணவர், அமரர் திரு பஞ்சாபகேசனின் நூற்றாண்டு!