,

Pugazh Petra 50 Parigara Kovilgal

170.00

12 ராசிதாரர்களுக்கும், 27 நட்சத்திரதாரர்களுக்குமான பரிகாரத்தலங்கள்

சித்தர்களும், ஞாளிகளும் சில குறிப்பிட்ட இடங்களில் கிரக தோஷங்களை நீக்கும் கதிர்வீச்சுகள், கர்ப்பப்பை கோளாறுகளைச் சீர் செய்யும் கதிர்வீச்சுகள் என, குறிப்பிட்ட சில கதிர்வீச்சுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ஞான திருஷ்டியில் கண்டறிந்திருக்கிறார்கள்.

திருமணப்பேறு, குழந்தைப் பேறு, பித்தம் தெளிந்து தெளிவான சித்தம் போன்றவை வாய்க்க, அந்தந்த இடங்களில் ஆலயம் அமைத்து, குறிப்பிட்ட தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து, அந்தத் திருவுருவங்கள் அந்தந்தக் கதிர்வீச்சுகளை அதிக அளவில் ஈர்த்து வெளிப்படுத்த வழி செய்திருக்கிறார்கள். அவையே பரிகாரத்தலங்களாகப் பாரினில் புகழ் பெற்றிருக்கின்றன.

நம் வீட்டிலேயே செல்ஃபோனில் சிக்னல் கிடைக்காத போது ஒவ்வொரு மூலையாக ஓடி சிக்னல் எங்கே கிடைக்கிறதென்று தேடி, அது கிடைத்தபின் பேசுகிறோம்.

அது போலத்தான் பரிகாரத்தலங்களும்! குழந்தைப் பேறு வாய்க்கும் ஆலயம் என்றால், அந்த ‘ஆலயம் கர்ப்பப் பை கோளாறுகளைச் சீராக்கும் கதிர்களை ஈர்க்கும் டவராகச் செயல்படுகிறது என்று பொருள். உங்களுக்கு எந்த மாதிரியான சிக்னல் தேவையோ அந்த சிக்னல் அதிகமாகக் கிடைக்கும் பரிகாரத்தலங்களுக்கு பக்தி மற்றும் முழு நம்பிக்கை என்னும் செல்ஃபோனுடன் சென்றால் போதும், உங்களுடைய குறை நிவர்த்தியாகும், உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.