Hindu Dharmam-Our doubts – Answers by MahaPeriyava:
A cross-examination with Maha Periyava:
- How many types of sins are there?
- What is lust?
- What is the way to be happy forever?
- Among Hinduism, Christianity, Islam, Buddhism, Jainism, which religion is the best? – What was Maha Periyaval’s answer to the embarrassing question?
Maha Periyava has provided scientific and practical answers to all the doubtful questions in Hindu Dharma, ‘Why?, Why?, How?
Kindly share your rating and review about this book Hindu Dharmam-Our doubts – Answers by MahaPeriyava on Google by clicking this link Rate us.
If you’re interested in exploring our other Periyava book collections, please visit this link for பெரியவா பொக்கிஷங்கள்.
இந்து தர்மம் – நம் சந்தேகங்கள்! மஹா பெரியவா பதில்கள்!
பெரியவாளிடம் ஒரு குறுக்கு விசாரணை :
- பாபங்கள் எத்தனை வகை?
- காமம் என்றால் என்ன?
- எப்போதும் ஆனந்தமாக இருக்க என்ன வழி?
- திருவானைக்கா ஆலயத்தில் மந்திரத்தின் மகிமையால் ஓர் அதிசயம் நிகழ்ந்ததாமே? அது என்ன?
- எட்டு சித்திகளை சித்தர்கள் மட்டும்தான் அடையமுடியுமா?
இவை மட்டுமல்லாமல் இந்து தர்மத்தில் இருக்கும், ‘ஏன்?, எதற்கு?, எப்படி?’ என்னும் சந்தேகக் கேள்விகள் அனைத்துக்கும் மஹா பெரியவா ஆதாரபூர்வமாக, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய பதில்களை படு சுவாரசியமாக புராணம், இதிகாசம், சின்னச் சின்ன கதைகள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றோடு கோத்து அளித்திருக்கிறார். படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பீர்கள்.
இந்து மதம் மூடநம்பிக்கைகளால் உருவாக்கப்பட்டது என்ற விமரிசனம் இன்றைக்கு நம்மில் நிறைய பேருக்கு உண்டு. இந்து மதத்தில் மட்டும் இவ்வளவு கடவுள்களா? நாமம் இடுவதும், விபூதி இடுவதும் அடுத்தவரை ஏமாற்றவா? அந்தணருக்கு தானம் அளித்து விட்டால் நம் தோஷம் விலகி விடுமா? எத்தனை விதமான கேள்விகள்? அத்தனை கேள்விகளுக்கும் விஞ்ஞான ரீதியாக விடை அளித்திருக்கிறார் மஹா பெரியவா! எந்த மதம் சிறந்த மதம்? இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், புத்த மதம், ஜைன மதம் இவற்றுள் எந்த மதம் சிறந்த மதம்? –தர்மசங்கடமான கேள்விக்கு மஹா பெரியவாளின் பதில் என்ன? கஷ்டங்களைக் கடவுள் வாபஸ் வாங்கிக்கொள்வானா? நம் பாவங்களின் தண்டனையாக இறைவனே கஷ்டங்களைத் தரும் போது அதை மாற்றும்படி அவனிடமே வேண்டுவது பலனைத் தருமா? – பதில் வேண்டுமா? இந்த நூலைப் படியுங்கள்