சுவாரசியப் பொக்கிஷமான இந்த நூலில், ஸ்ரீரங்கநாதர் வரலாறு,
ஆலய தரிசனம்,
அரங்கன் மற்றும் தாயார் தரிசனம்,
அரங்கனை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களின் வரலாறு
அரங்கன் ஆலயத்தில் கம்பர் இராமாயணக் காவிய அரங்கேற்றத்திற்காகப் பட்ட அல்லல்கள்,
தில்லி சுல்தானின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கன் சுமார் 48 ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் செய்து சுல்தானியர் ஆதிக்கத்தை முறியடித்து மீண்டும் ஆலயத்தில் ஆட்சி புரிய
ஆரம்பித்த உணர்ச்சிக் கொந்தளிப்பான காவியம்,
வியக்க வைக்கும் சுவையான பின்னணி வரலாறுடன் அரங்கன் அமுது செய்யும் நைவேத்தியங்களின் செய்முறைகள், என இதுவரை வெளிச்சத்துக்கு வராத சுவையான தகவல்கள் அனைத்தும் அற்புதமான சித்திரங்களுடன் வழங்கப்பட்டிருக்கின்றன.