, ,

Mootuvaliyilirundhu Muzhumaiyana Viduthalai (மூட்டுவலியிலிருந்து முழுமையான விடுதலை)

60.00

நாற்பது வயதை நெருங்கிவிட்டாலே.. குறிப்பாக, பெண்கள் அடிக்கடி முனகும் ஒரு வார்த்தையாகிவிட்டது மூட்டுவலி. தினசரி பணிகளை செய்வதே அவர்களுக்கு சிரமமான காரியமாகிவிடுகிறது. மாறிப்போன வாழ்வியல் அம்சங்கள், அதிக உடல் பருமன், ஹார்மோன் பிரச்னைகள் என்று இதற்கு பல காரணங்கள்.
சரியான நிபுணர்களை கண்டடைந்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும் தான். ஆனால், இன்றைய சமூகச் சூழலில் அதுதானே சிக்கலான விஷயமாக உள்ளது. விளைவு? எவ்வளவு செலவு செய்தாலும் பிரச்னைகள் தீர்வதே இல்லை. மாறாக, தொடர் வாடிக்கையாளர்களாக, தொடர் நோயாளிகளாக ஆகிப்போகும் அவல நிலை! இதனால், அவரவர் ஆரோக்கியம் காக்க அவரவரே விழிப்பு உணர்வு பெறவேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், செலவில்லாத ஆரோக்கிய தீர்வுகளை முன்னிறுத்தி மலிவு விலையில் தரமான நூல்களை வெளியிட்டு வரும் மல்லிகை பிரசுரம், இதோ மூட்டுவலிக்கான எளிய தீர்வுகளோடு ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறது.


நவீன மருத்துவம் முன்வைக்கும் தகவல்களை விவரிப்பதோடு, நம் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் சொல்லும் செலவே இல்லாத, மிக எளிய வழிகளைக் காட்டுவதுதான் இந்நூலில் சிறப்பம்சம். கால்சியம் மாத்திரைகள் தேவையா, மூட்டுவலி உள்ளவர்கள் செய்யவேண்டியது, செய்யக் கூடாதது, எளிமையான வீட்டு வைத்திய முறைகள், உணவே மருந்தாக செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்று மூட்டு வலியிலிருந்து விடுதலை பெற தேர்ந்த நிபுணர்கள் தரும் பல்வேறு வழிமுறைகள் உள்ளே அணிவகுக்கின்றன.

Availability: 5 in stock

CODE WORKING