, ,

SN34 Pidi Vaitha Kaththi

100.00

‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.