, ,

Valigalai Pokkom Eliya Payirchigal (வலிகளைப் போக்கும் எளிய பயிற்சிகள்!)

60.00

வயதானவர்கள்தான் என்றில்லை, பலரும் இன்று மூட்டு வலி, முதுகு வலி, கழுத்துவலி, குதிகால்வலி என்று பல்வேறு உடல்வலிகளால் அவதிப்படுகிறார்கள்.

வலிகளுக்கு நிவாரணமாக தொடர்ந்து மாத்திரைகளை நாடுவது சரியான அணுகுமுறையல்ல என்பதை அனைவருமே அறிவோம். தொடர்ந்து பயன்படுத்தப்படும் வலிநிவாரணிகளால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில், மருந்து மாத்திரைகளின்றி, வலிகளிலிருந்து விடுதலை பெற நவீன மருத்துவம் தந்திருக்கும் கொடைதான் பிஸியோதெரபி பயிற்சிகள்!

அன்றாடம் வீட்டிலிருந்தபடியே சுலபமாக, சின்னச் சின்ன பயிற்சிகளை செய்து, வாட்டி வதைக்கும் வலிகளை விரட்டியடிக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய விஷயம்!

உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியமுமே மேம்படுகிறது. அந்த நுட்பங்களைத்தான் இந்த நூலில் எளிய முறையில் கற்றுத் தருகிறார், கோவையைச் சேர்ந்த இயன்முறை மருத்துவரான ஆ.மணிவேல்.

இவற்றை முறையாகப் பின்பற்றி, தொடர்ந்து செய்துவந்தால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.. உடலில் மட்டுமல்ல, மனதிலும்!

Availability: 5 in stock

SKU: M02-1 Categories: , ,