Naan Oru Rasigan by Madan
Madan’s humorous analysis of the psychology of various critters then and today. His hilarious cartoons crawl along with every historical event that makes us laugh and think. Madan’s sense of humor permeates the book, making readers smile naturally, without ever needing to say “smile, please…” His writing style is so captivating that once you start, you won’t want to put it down until you’ve finished.
அந்தக் காலத்தில் தாடி வளர்த்தவர்களும், மழுங்க, மழுங்க ஷேவ் செய்தவர்களும் என்னென்ன கதிக்கு ஆளானார்கள் என்று வரலாற்றின் இண்டு இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் ரகசியமான விஷயங்களை எல்லாம் தம்முடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களோடு (சொந்தக் காதல் முயற்சிகளும் உண்டு!) ஒப்பிட்டு ‘நான் ஒரு ரசிகன்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு எழுத்தாகச் செதுக்கிச் செதுக்கி இந்தப் படைப்பை வடித்திருக்கிறார் மதன்.
பார்த்தாலே நம்மை அறியாமலேயே வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் மதனின் அட்டகாசமான கார்ட்டூன்களும் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுடனும் கூடவே வலம் வருகின்றன.
கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரசியமான நடை. புத்தகம் முழுக்க இழையோடும் மதனின் நகைச்சுவை உணர்வு நம்மை, ‘ஸ்மைல் ப்ளீஸ்…’ என்று சொல்லாமலேயே புன்னகையுடனேயே படிக்க வைக்கும்.