Books, Novels, Rajendra Kumar
RK03 Ennodu Ore Iravu
₹100.00
ராஜேந்திரகுமார் ஒரு ஆல்ரவுண்டர். க்ரைம் கதைகள், நகைச் சுவைக் கதைகள், சமூகக் கதைகள், ஆவிக் கதைகள் என்று வெரைட்டி வாரியாக எழுதிக் குவித்த மனிதர். ஒவ்வொரு ஜானரும் அதற்குரிய இயல்புக்குக் குறைவின்றி அமைந்திருக்கும். நகைச்சுவைக் கதைகள் வாய்விட்டுச் சிரிக்கவும், க்ரைம் கதைகள் சஸ்பென்ஸ் குறையாதவையாகவும், சமூகக் கதைகள் மனதைத் தொடும் வண்ணமாகவும் அமைந்திருக்கும் என்றால், ஆவிக்கதைகள் ஒரு படி மேலே. படக் படக்கென்று அடிக்கும் இதயத்துடன் முற்றும் வரை படித்துவிட்டுத்தான் கீழே வைக்க முடியும் என்ற அளவுக்கு எழுதுகிற எக்ஸபர்ட் அவர். ஓவியக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற ராஜேந்திரகுமார் முழுநேர ஓவியராக இல்லாமல் முழுநேர எழுத்தாளரானது தமிழ் வாசகர்கள் செய்த பாக்கியம்.