, ,

Magalir Vaithiyam (மகளிர் வைத்தியம்)

60.00

முன்பெல்லாம் உடலுக்கு ஒன்று என்றால், அதன் அறிகுறிகளை வைத்தே வீட்டு வைத்தியம் சொல்லி தெம்பூட்ட கூடவே பெரியவர்கள் இருந்தார்கள். இன்றோ கணவன், மனைவி, குழந்தை என்றாகிப் போன நவீன மைக்ரோ குடும்பச் சூழலில் ஆலோசனை தரவே ஆளில்லாத நிலை. இந்நிலையில், நம் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளை எடுத்துச் சொல்லி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த நூல், ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்!

மாதவிலக்கு பிரச்னைகள், சருமத் தொந்தரவுகள், கர்ப்பம், பிரசவம், பச்சிளம்குழந்தை பராமரிப்பு என பல்வேறு தலைப்புகளில் மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன் தரும் குறிப்புகள், பெண்களின் ஆரோக்கிய வாழ்க்கைப் பயணத்துக்கு உற்ற துணையாக விளங்கும். அதோடு, அனுபவசாலியான அம்மா அல்லது பாட்டி கூடவே இருக்கிற உணர்வையும் இந்த நூல் நிச்சயம் தரும்!

Availability: 5 in stock