Unavai Maatru Udalai Kaapaatru (உணவை மாற்று.. உடலைக் காப்பாற்று!)
₹75.00
மாறிப்போன வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக இன்று நீரிழிவு, ரத்த அழுத்தம், பி.சி.ஓ.டி போன்ற தொற்றா நோய்களுக்கு பெருவாரியான மக்கள் தங்களின் இன்னுயிரையும் பொருளாதாரத்தையும் இழந்து வருவது நிகழ்கால துயரமாகியிருக்கிறது. இதை சரிசெய்ய நம் முன் இருக்கும் முதன்மையான வழி.. நம் உணவு முறையை சரியான திசையில் மாற்றிக்கொள்வதுதான்!
‘உணவை மாற்றினால் உடலைக் காப்பாற்றிக் கொள்ளலாம்..’ என்று சமூக ஊடகங்களில் பயனுள்ள பரப்புரையை மேற்கொண்டு வரும் சிவகங்கையைச் சேர்ந்த டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லாதான் இந்த நூலின் ஆசிரியர். இன்றைய நம் உணவு முறையில் உள்ள சிக்கல்கள் என்ன? களையப்படவேண்டிய உணவுகள் எவை? உடைக்கப்பட வேண்டிய நம்பிக்கைகள் எவை? அவசியம் உண்ண வேண்டிய உணவுகள் எவை.. எல்லாவற்றையும் எளிய மொழியில் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறார் டாக்டர்.
இந்நூலில் கூறப்பட்டிருக்கும் அத்தனை ஆலோசனைகளும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்பலாம். காரணம், இவை ஒவ்வொன்றும் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா ஒரு மருத்துவராக தனது நோயாளிகளுக்கு பரிந்துரை செய்து, முழுமையான பயன் தந்த அனுபவக் குறிப்புகள்!
Availability: 5 in stock




