Muthirai Vaithiyam (முத்திரை வைத்தியம்)
₹75.00
தன்னுடைய நோய்க்கு தானே மருந்து தேடி, அதன் மூலம் டாக்டராகவே ஆனவர் ஜெயலக்ஷ்மி.
சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா தொந்தரவு இவருக்கு. ஒருசமயம் இதன் பாதிப்பு அதிகமாகி, மரணத்தின் எல்லைக்கே தள்ளப்பட்டிருக்கிறார். அதன்பிறகுதான், ஆஸ்துமாவுக்கான நிரந்தரத் தீர்வு தேடி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, முத்திரை வைத்தியம் என ஒவ்வொன்றாக கற்றுத் தேர்ந்து தன் நோயையும் குணப்படுத்திக் கொண்டார்.
இவருடைய செலவில்லாத வைத்திய முறைகள் ‘மல்லிகை மகள்’ இதழில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வெளிவந்தன. எண்ணற்ற வாசகர்கள் அதைப் படித்து பயன் பெற்றார்கள். இது மேலும் பலருக்கும் போய்ச் சேர்ந்து, பயன்தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், எளிதாக எடுத்து பயன்படுத்த வசதியாக தனி நூலாக கொண்டு வந்திருக்கிறோம்.
எளிமையான வைத்தியமுறைகள் என்பதோடு, இதில் ‘செலவும் இல்லை; பக்கவிளைவுகளுக்கும் இடமில்லை’ என்பது முற்றிலும் வணிகமயமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் எப்பேர்ப்பட்ட வரம்!
Availability: 5 in stock



